பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம்
ஒட்டன்சத்திரம் : பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழாவிற்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு 10 நாட்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் துவங்கியது.தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் வீதம் 10 நாட்களுக்கு இரண்டு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழாவை கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணி, அன்னபூரணி, நகராட்சி தலைவர் திருமலைசாமி துவங்கி வைத்தனர்.