உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கால்பந்து லீக்: நாமக்கல் கல்லுாரி அணி வெற்றி

கால்பந்து லீக்: நாமக்கல் கல்லுாரி அணி வெற்றி

திண்டுக்கல்: திண்டுக்கல் மலையடிவாரம் மைதானத்தில் நடைபெறும் கே.எப்.சி. கோப்பைக்கான ஐவர் கால்பந்து போட்டியில் நாமக்கல் முத்தாயம்மாள் கல்லுாரி அணி வெற்றி பெற்றது.திண்டுக்கல் மாவட்டம் பொங்கல் பண்டிகையொட்டி கே.எப்.சி. கால்பந்து சங்கம் சார்பில் கே.எப்.சி. கோப்பைக்கான 12ம் ஆண்டு மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி கோட்டை மாரியம்மன் கோயில் பின்புறமுள்ள மலையடிவாரம் மைதானத்தில் பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் தலைமையில் துவங்கியது. தமிழகம் முழுவதும் 60 அணிகள் பங்கேற்கும் இந்த ஐவர் கால்பந்தாட்ட போட்டியில் பொது பிரிவில் 40 அணிகளும், 12 வயது பிரிவில் 12 அணிகளும், 14 வயது பெண்கள் பிரிவில் 8 அணிகளுமாக 60 அணிகள் பங்கேற்கின்றன. மின்னொலியில் நடைபெற்ற இந்த போட்டியின் முதல் நாளான ஆட்டத்தில் நாமக்கல் முத்தாயம்மாள் கல்லுாரி அணி, திண்டுக்கல் எஸ்.இ. ஒன்டர்ஸ் அணியை 2:0 என்ற கோல்கணக்கில் வென்றது. தலைவர் சுரேஷ், துணைத் தலைவர்கள் மணிகண்டன், செந்தில், செயலாளர் சுரேஷ், பொருளாளர் ராஜாமணி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ