உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கால்பந்து லீக்:சீட்ஸ் அணி வெற்றி

கால்பந்து லீக்:சீட்ஸ் அணி வெற்றி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் 2024--25 கால்பந்து தொடர் லீக் போட்டியில் சீட்ஸ் அணி வெற்றி பெற்றது.புனித மரியன்னை பள்ளி மைதானத்தில் நடந்த போட்டியில் ஏ.பி.சி., பாலி கால்பந்து அணிக்கு எதிரான போட்டியில் சீட்ஸ் கால்பந்து அணி 3:1 என்ற கோல் கணக்கில் வென்றது. வசந்த், சரத், நிசன் தலா 1 கோல் அடித்தனர். ஏ.பி.சி., அணியில் விஜய் கோல் அடித்தார். ஆர்.என்.எல்., எம்.எப்.சி., அணிக்கு எதிரான போட்டியில் ஞானம் எம்.எப்.சி., கால்பந்து அணி 4:0 என்ற கோல் கணக்கில் வென்றது. ரீகன், மணிமாறன், சஞ்சய், கிருஷ்ணா கோல் அடித்தனர். பீலே ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு எதிரான போட்டியில் எம்.எம்.எம்., எப்.சி., கால்பந்து அணி 3:0 என்ற கோல் கணக்கில் வென்றது. யுவராஜ் 2, மோகன் 1 என கோல் அடித்தனர். எஸ்.எஸ்.எம்., கால்பந்து அணி, பழநி ஸ்டால்லியன்ஸ் எப்.சி., அணிக்குமிடையேயான போட்டியில் 1:1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. எஸ்.எஸ்.எம்., அணியில் தியாகு , பழநி அணியில் எடிசன் கோல் அடித்தனர். எம்.எஸ்.பி., பள்ளி மைதானத்தின் நடந்த போட்டியில் பட்டுமணி கால்பந்து கிளப் அணிக்கு எதிரான போட்டியில் அன்னை ஸ்போர்ட்ஸ் கால்பந்து அணி 1:0 என்ற கோல் கணக்கில் வென்றது. கீர்த்திவாசன் கோல் அடித்தார். ஆர்ட்ஸ் டிரஸ்ட் திண்டுக்கல் சிட்டி கால்பந்து அணிக்கு எதிரான போட்டியில் 2:0 என்ற கோல் கணக்கில் சன் ஸ்போர்ட்ஸ் கிளப் கால்பந்து அணி வென்றது. அமர், சூர்யா கோல் அடித்தனர். கோரோனேசன் கால்பந்து அணிக்கு எதிரான போட்டியில் 5:0 என்ற கோல் கணக்கில் என்.கே.ஏ.பி., எப்.சி., அணி வென்றது. வராஜ், கோபி, டேனியல், எபியன், ரூபன் கோல் அடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ