உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவர்கள் இடையே கால்பந்து போட்டி

மாணவர்கள் இடையே கால்பந்து போட்டி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் திண்டுக்கல் மேற்கு ரோட்டரி, குயின் சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கிடையேயான 31வது ஆண்டு கோபாலகிருஷ்ணன் நாயுடு நினைவு கோப்பை,21 வது ஆண்டு காவேரியம்மாள் நினைவு கோப்பைக்கான கால்பந்து போட்டி நடந்தன.திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த இறுதி போட்டிகளில் ஆண்கள் பிரிவில் முதல் இடம் பிடித்த புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளிக்கு கோபாலகிருஷ்ணன் நினைவு கோப்பை ,ரூ.10,000 , சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற எம்.எஸ்.பி., பள்ளி அணிக்கு அரசன் ரியல் எஸ்டேட் கோப்பை,ரூ 7000 வழங்கப்பட்டது.பெண்கள் பிரிவில் முதல் இடம் பிடித்த திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி அணிக்கு காவேரி அம்மாள் நினைவு கோப்பை , ரூ.5000, இரண்டாம் இடம் பெற்ற சின்னாளப்பட்டி தேவாங்கள் பள்ளிக்கு கே.பி.எஸ்., பில்டர்ஸ் கோப்பை , ரூ.3000 வழங்கப்பட்டது.பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட கால்பந்து கழக தலைவர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். மாநில தலைவர் சண்முகம் வரவேற்றார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, பள்ளி தாளாளர் மரிய நாதன், தலைமையாசிரியர் ஸ்டீபன், ரோட்டரி கஜேந்திரன், துணை ஆளுநர் ஷர்மிளா பாலகுரு கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை