கல்லுாரியில் கால்பந்து போட்டிகள்
திண்டுக்கல்: திண்டுக்கல் எஸ்.எஸ்.எம். கல்லுாரியில் எஸ்.எஸ்.எம். ஹையர் எஜூகேஷனல் இன்ஸ்டிடியூஷன் புட்பால் சார்பில் போட்டி நடந்தது. 10 அணிகள் பங்கேற்றது. இதன் இறுதிப் போட்டியில் எஸ்.எஸ். எம். கல்லுாரி அணி,ஞானம் மெமோரியல் கால்பந்து அணியும் விளையாடியது.ஞானம் மெமோரியல் கால்பந்து அணி 4:2 என்ற கோல் கணக்கில் எஸ்.எஸ். எம். கல்லுாரி அணியினை வென்றது. எஸ்.எஸ்.எம். கல்லுாரி முதல்வர் சம்பத்குமார், நிர்வாக அலுவலர் ராமசாமி, பரிசு வழங்கினார். மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் பங்கேற்றார். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் ஜெயக்குமார், கவுதமன் செய்தனர்.