மேலும் செய்திகள்
திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து இருவர் பலி
18-Nov-2024
திண்டுக்கல்: திருச்செந்துார் யானை தாக்கி பாகன் உட்பட இருவர் பலியான சம்பவம் எதிரொலியாக திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் யானை கஸ்துாரியை வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை தாக்கியதில், உதவி பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக பழநி முருகன் கோயில் யானை கஸ்துாரியை தினமும் காலை, அதன் கால்கள், துதிக்கையின் அசைவுகள் வித்தியாசமாக உள்ளதா, நடவடிக்கையில் எதுவும் மாற்றம் இருக்கிறதா,உணவுகளை முறையாக சாப்பிடுகிறதா என ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணிக்க அலுவலர்களை திண்டுக்கல் வனத்துறை அதிகாரிகள் நியமித்துள்ளனர். அதன்படி யானை தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த மாற்றமும் இல்லை. யானை இயல்பு நிலையில் உள்ளது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவ குழுவினரும் யானையை பரிசோதனை செய்கின்றனர்.
18-Nov-2024