உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டூ - வீலர் மீது லாரி மோதல் வனக்காப்பாளர், இருவர் பலி

டூ - வீலர் மீது லாரி மோதல் வனக்காப்பாளர், இருவர் பலி

செம்பட்டி:திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவை சேர்ந்தவர் ராமசாமி, 35. கன்னிவாடி வனச்சரகத்தில் செங்கட்டாம்பட்டி பகுதி வனக்காப்பாளராக பணியாற்றி வந்தார். இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தேனி மாவட்டம் போடியை சேர்ந்த உறவினர் மகன் அருண்பாண்டி, 20, இவரது வீட்டில் தங்கி படித்து வந்தார்.நேற்று இரவு ராமசாமி தன் டூ-வீலரில் ஹெல்மெட் அணியாமல், அருண்பாண்டி, அவருடன் படிக்கும் அரவிந்த் பாண்டி, 21, ஆகியோருடன் திண்டுக்கல் -குமுளி ரோட்டில் வந்தார். அப்போது எதிரே வந்த லாரி மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட மூவரும் பலியாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி