நாட்டு துப்பாக்கியுடன் மான் வேட்டை4 பேர் கைது
சின்னாளபட்டி:வனத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் கடமான் வேட்டையாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.கன்னிவாடி பாரஸ்டர் வெற்றிவேல் தலைமையிலான குழுவினர் ஏ.வெள்ளோடு, செட்டியபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சாக்குப்பையுடன் வந்த 4 பேர் பிடிபட்டனர்.பையில் மான் இறைச்சி, மான் தோல், இரட்டை குழல் நாட்டுத்துப்பாக்கி உள்ளிட்டவை வைத்திருந்தனர். விசாரணையில் சின்னாளபட்டியை சேர்ந்த கோபிநாத் 48, கலிக்கம்பட்டி வேளாங்கண்ணி 39, ஏ.வெள்ளோடு மாணிக்கம் 41, அமலிநகர் அந்தோணி 35, சிறுமலை, கன்னிவாடி வனப்பகுதியில் வன உயிரின வேட்டையில் ஈடுபட்டு வந்தது உறுதியானது. 4 பேரையும் கைது செய்த வனத்துறையினர் அவர்களிடமிருந்த கடமான் இறைச்சி, தோல், நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.