உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆயுதங்களுடன் சுற்றிய சிறார் உட்பட நால்வர் கைது

ஆயுதங்களுடன் சுற்றிய சிறார் உட்பட நால்வர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மேட்டுப்பட்டி மொட்டணம்பட்டி அருகே பயங்கர ஆயுதங்களுடன் நால்வர் சுற்றி திரிவதாக தெற்கு போலீசார் தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., முனியாண்டி தலைமையிலான போலீசார் மொட்டணம் பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது திண்டுக்கல் பிள்ளையார்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ் 24, மேட்டுப்பட்டியை சேர்ந்த 3 சிறார்கள் உட்பட நால்வரும் ஆயுதங்களுடன் அங்கு பதுங்கி இருந்தனர். நால்வரையும் கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை