உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தொழிலாளி கொலையில் நான்கு பேருக்கு ஆயுள்

தொழிலாளி கொலையில் நான்கு பேருக்கு ஆயுள்

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தீபாவளி கொண்டாட ஊருக்கு வந்த தொழிலாளியை வெட்டிக்கொலை செய்த வழக்கில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தும் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நத்தம் அருகே சிறுகுடி பூசாரிப்பட்டியைச் சேர்ந்தவர் மகாராஜன் 40. வெளியூரில் கூலி வேலை செய்து வந்த இவர் தீபாவளி பண்டிகைக்காக 2020ல் பூசாரிப்பட்டிக்கு வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த குமரேசன் 46, குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் மகாராஜன் வீடு முன் பொதுப்பாதையில் குமரேசன் மணல் கொட்டியுள்ளார். இதை தட்டிகேட்டதில் மகாராஜன், குமரேசன் இடையே தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து குமரேசன், மகன் ஞானசேகரன் 24, உறவினர் ராஜேந்திரன் 61, ஞானசேகரன் நண்பர் செந்தில்குமார் 23, ஆகியோர் சேர்ந்து மகாராஜனை வெட்டிக்கொலை செய்தனர். மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் ஞானசேகரன், குமரேசன், ராஜேந்திரன், செந்தில்குமாருக்கு தலா ஆயுள் தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி