உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயில்களில் பவுர்ணமி வழிபாடு; கிரிவலம்

கோயில்களில் பவுர்ணமி வழிபாடு; கிரிவலம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்கள் பவுர்ணமி சிறப்பு வழிபாடுகள் நேற்று நடந்தது. இதையொட்டில் திண்டுக்கல்லில் நடந்த கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், பழநிரோடு காளியம்மன் கோயில், ஆர்.எம்.காலனி வெக்காளியம்மன் உட்பட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. சிறப்பு விளக்கு பூஜை, சிறப்பு அலங்கார, தீபராதனைகள் நடந்தது. அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில், தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களிலும் பவுர்ணமி சிறப்பு அபிேஷகம் நடந்தது. தாடிகொம்பு சவுந்தராஜ பெருமாள் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.திண்டுக்கல் மலைக்கோட்டை சுற்றி ஒவ்வொரு பவுர்ணமியின் போதும் பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபாடு நடத்துகின்றனர். அதன்படி ஆனி பவுர்ணமியையை முன்னிட்டு திண்டுக்கல் மலைக்கோட்டை அபிராமி அம்மன், பத்மகிரீஸ்வரர் ஆலய பாதுகாப்பு பேரவை, ஹந்து முன்னணி அமைப்பு சார்பில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற கிரிவலம் நடந்தது . இதையொட்டி திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 3 கி.மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் அமைந்துள்ள 8 சிவாலயங்கள் உட்பட 22 கோயில்களிலும் கிரிவலம் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.கன்னிவாடி : தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் திருவிளக்கு வழிபாடு நடத்தினர். அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில், குட்டத்துப்பட்டி பிச்சை சித்தர் கோயிலில் பவுர்ணமி சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.நத்தம் :திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனிமாத பவுர்ணமி பூஜை விழா நடந்தது. இதையொட்டி முருகப் பெருமானுக்கு பால், பழம், பன்னீர், புஷ்பம், இளநீர், விபூதி உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ராஜாங்க திருக்கோலத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.தொடர்ந்து அன்னதானம் வழங்கபட்டது. நத்தம் மாரியம்மன் கோயில், கோவில்பட்டி கைலாசநாதர் கோயில், குட்டூர் அண்ணாமலையார் கோயில்,அக்ரஹாரம் வாராகி அம்மன் கோயில்,அசோக்நகர் பகவதி அம்மன் கோயில், மீனாட்சிபுரம் காளியம்மன், கர்ணம் தெரு மதுரகாளியம்மன் கோயில்களிலும் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !