உள்ளூர் செய்திகள்

தோட்டக்கலை பயிற்சி

கொடைக்கானல்: கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் அட்மா திட்டத்தில் மன்னவனுார், கே.சி. பட்டியில் கலைஞர் திட்டத்தில் ரபி பருவத்திற்கான பயிற்சி நடந்தது. காபி, மிளகு, சவ்சவ், பீன்ஸ் பயிர்களில் ஏற்படக்கூடிய நோய் , பூச்சி தாக்குதல், மண் மாதிரி குறித்து தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் குமார் எடுத்துரைத்தார். மன்னவனுாரில் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத் தலைவர் ரவீந்திரன் வெள்ளைப் பூண்டு, பீன்ஸ், உருளைக்கிழங்கு, கேரட் பயிர்களில் ஏற்படக்கூடிய நோய் மேலாண்மை, ஒருங்கிணைந்த உரமிடுதல் குறித்து விளக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை