உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பூண்டு லாரி வியாபாரியிடம் கத்தியை காட்டி வழிப்பறி

பூண்டு லாரி வியாபாரியிடம் கத்தியை காட்டி வழிப்பறி

தேவதானப்பட்டி : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா ஆவரம்பட்டியைச் சேர்ந்த ஆதிகேசவன் 21, மினி லாரியில் ஊர் ஊராகச் சென்று பூண்டு, வெங்காயம் விற்பனை செய்து வருகிறார். இவர் தேனி மாவட்டம், கெங்குவார்பட்டி ராமர் கோயில் பகுதியில் விற்பனையில் ஈடுபட்ட போது கெங்குவார்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன், விஜய் மற்றும்4 பேர் கத்தியை காட்டி மினி லாரியை வழிமறித்தனர். லாரியில் இருந்த 2 மூடை பூண்டு, ரூ. 5 ஆயிரம், அலைபேசி, எக்ட்ரானிக் தராசு உள்ளிட்ட ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து தப்பினர். ஆதிகேசவன் புகாரின்படி தேவதானப்பட்டி போலீசார் இதில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை