அ.தி.மு.க., பழனிசாமி பிறந்தநாள் பழநியில் தங்கதேர் இழுத்த கவுதமி
பழநி: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு பழநி முருகன் கோயிலில் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை கவுதமி தங்கதேர் இழுத்து வழிபட்டார்.அப்போது பக்தர்கள் கூட்டத்தில் பெண் ஒருவர் மயங்கி விழ கவுதமியுடன் வந்த முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன் தண்ணீர் கொடுத்து உதவினார். இதன் பின் முருகரை வழிப்பட்ட கவுதமி ரோப்கார் மூலம் அடிவாரம் வந்தார்.அவர் கூறியதாவது: டாஸ்மாக்கில் தற்போது நடைபெற்று வரும் சோதனையில் சிறிதளவுக்கு மட்டுமே உண்மை வெளிவந்துள்ளது. வெளிவர வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக உள்ளது என்றார்.