உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை, குடகனாற்றில் காணும் பொங்கல்

கொடை, குடகனாற்றில் காணும் பொங்கல்

சின்னாளபட்டி: கொடைக்கானல், குடகனாற்றில் பித்தளைப்பட்டி கிராமத்தினர், சுற்றுலா பயணிகள் காணும் பொங்கல் கொண்டாடினர்.பொங்கல் பண்டிகையின் நிறைவு நாளாக நேற்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பித்தளைப்பட்டி கிராமத்தினர் பாரம்பரிய முறைப்படி இவ்விழாவை விமரிசையாக குடகனாற்றில் கொண்டாடினர். இதையொட்டி காளியம்மன் கோயிலுக்கு கால்நடைகளையும் அழைத்து வந்தனர்.அங்கு சிறப்பு பூஜைகளுக்கு பின் மகா தீபாராதனை, கால்நடைகளுக்கு தீர்த்தம் தெளித்தல் நடந்தது. கிராமத்தில் வீடுதோறும் வழிபாட்டை தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. குடகனாற்றில் இறக்கி வைத்து பெண்கள் கும்மி ஆட்டம், கிராமிய பாடல்கள் பாடினர். தீபாராதனைகளுக்கு பின், ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். தொடர்ந்து முளைப்பாரியை ஆற்றில் கரைத்தனர்.கொடைக்கானல்: பொங்கல் தொடர் விடுமு றையால் சில தினங்களாக சுற்றுலா பயணிகள் வரு கை அதிகரித்தி ருந்தது. காணும் பொங்கலை முன்னிட்டு நேற்றும் ஏராளமான சுற்றுலாபயணி கள் வந்தனர். பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வனசுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். ஏரிச்சா லையில் சைக்கிள், குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். அவ்வப்போது தரை இறங்கிய மேக கூட்டத் தை பயணிகள் ரசித்தனர். பிரையன்ட் பூங்கா புல் வெளியில் குது கலத்துடன் விளையாடி மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை