உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிறுமிக்கு தொல்லை; வாலிபருக்கு சிறை

சிறுமிக்கு தொல்லை; வாலிபருக்கு சிறை

திண்டுக்கல்: குஜிலியம்பாறை கரிக்காலியில் 15 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.குஜிலியம்பாறை காரிக்காலியை சேர்ந்த ஆம்னி பஸ் டிரைவர் ஈஸ்வரன்25. 2024 பிப்.7ல் அதே பகுதியை சேர்ந்த 15 வயது பள்ளி சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார். வடமதுரை போலீசார் போக்சோவில் ஈஸ்வரனை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. ஈஸ்வரனுக்கு 23 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பு வழக்கறிஞராக மைதிலி ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி