உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  விலை ஓகே, விளைச்சல் இல்லையே விரக்தியில் கோவக்காய் விவசாயிகள்

 விலை ஓகே, விளைச்சல் இல்லையே விரக்தியில் கோவக்காய் விவசாயிகள்

ஒட்டன்சத்திரம்: கோவக்காய்க்கு நல்ல விலை கிடைத்த போதிலும் விளைச்சல் இல்லாததால் பயிரிட்ட விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். ஒட்டன்சத்திரம், காவேரியம்மாபட்டி சுற்றிய கிராமப் பகுதிகளில் கோவக்காய் அதிகமாக பயிரிடப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு வரை விளைச்சல் அதிகமாக இருந்ததால் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் விலை சரிவடைந்து கிலோ ரூ.20 முதல் 25 வரை விற்பனையானது. இந்நிலையில் மழைக்காலம் , பனிக்காலம் தொடங்கியதால் கோவக்காய் செடிகள் நோய் தாக்குதலுக்கு ஆளாகி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு வரத்து குறையத் தொடங்கியது. அதற்கு ஏற்ப விலையும் அதிகரிக்க தொடங்கி கிலோ ரூ.48க்கு விற்பனை ஆனது. காவேரியம்மாபட்டி விவசாயி பழனிமுத்து கூறியதாவது: விளைச்சல் அதிகமாக இருந்தபோது கட்டுப்படியான விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தற்போது விலை அதிகரித்திருந்த போதிலும் விளைச்சல் இல்லாததால் விரக்தி அடைந்துள்ளனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை