முனியப்ப சுவாமிக்கு தங்க கவசம்
எரியோடு: எரியோடு ச.புதுார் முனியப்ப சுவாமி கோயிலில் தங்க கவசம் அணிவிக்கும் விழா நடந்தது. நேற்று காலை நால்ரோடு ஸ்ரீ சக்திவிநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் தங்க கவசம், பால் குடங்களை ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்தனர். பெருமாள்மலை சுயம்பு பெருமாள் கோயில் அர்ச்சகர் ஜெகநாதன் தலைமையிலான குழுவினர் யாக வேள்வி பூஜைகள், பால் அபிஷேகம் செய்த பின்னர் தங்க கவசங்களை சுவாமிக்கு அணிவித்தனர். அன்னதானம் நடந்தது.