மேலும் செய்திகள்
நஷ்டஈடு செலுத்தாததால் இரு அரசு பஸ்கள் ஜப்தி
21-Nov-2024
திண்டுக்கல் : விபத்தை ஏற்படுத்திய வழக்குகளில் இழப்பீடு வழங்காததால் திண்டுக்கல்,பழநியில் அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.தேனி மாவட்டம் பெரியகுளம் அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்த விவசாயி மாசானம்60. 2018 மே 12ல் பெரியகுளம் - தேனி மெயின் ரோடு டி.கள்ளிப்பட்டி அருகே நடந்து சென்றார். திண்டுக்கல்லிலிருந்து தேனி நோக்கி சென்ற அரசு பஸ் மோதியதில் மாசானம் இறந்தார். அவரது மனைவி ராசாத்தி50,திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிபதி இழப்பீடாக ரூ.12.50 லட்சம் வழங்கும் படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு 2021ல் உத்தரவிட்டார். இழப்பீடு வழங்குவதற்கான எந்த முயற்சியும் போக்குவரத்து கழகம் எடுக்கவில்லை. இதனால் ராசாத்தி மீண்டும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி முத்துசாரதா,தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி வழக்கறிஞர் அஸ்ரப்அலி தலைமையிலான நீதிமன்ற ஊழியர்கள் நேற்று காலை திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் கோவை செல்ல புறப்பட தயாராக இருந்த பஸ்சை ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு எடுத்து வந்தனர்.பழநி: 2014 ல் பழநி பழைய தாராபுரம் ரோடு பகுதியில் டூவீலரில் வந்த முகமது அன்சாரி 36, மீது அரசு பஸ் மோதியது. பலத்த காயம் அடைந்த அவருக்கு உடல் ஊனம் ஏற்பட்டது. பழநி கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. 2024ல் ரூ.2 லட்சத்து 67 ஆயிரத்து 69 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. இழப்பீடு வழங்காததால் ரூ.மூன்று லட்சத்து 33 ஆயிரத்து 732 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. இதையும் வழங்காததால் முதன்மை சார்பு நீதிபதி ரேணுகாதேவி உத்தரவில் பழநி பஸ் ஸ்டாண்டில் நின்ற அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
21-Nov-2024