உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளி: மாணவர்கள் அவதி

சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளி: மாணவர்கள் அவதி

எரியோடு: எரியோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாமல் உள்ளதால் மாணவர்கள் பாதிக்கின்றனர். வேடசந்துார் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அருகே அரசு மேல் நிலைப்பள்ளி செயல்படுகிறது. பல கிராமங்களை சேர்ந்த 1000க்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியின் முன் பகுதியில் குறிப்பிட்ட துாரத்திற்கும், அலுவலகம் அமைந்துள்ள பகுதியிலும் மட்டும் சில நுாறு மீட்டர் சுற்றுச்சுவர் அமைக்கப் பட்டது. இதிலும் சில பகுதிகள் சரிந்து கீழே விழுந்து கிடக்கின்றன. மற்ற இரு திசைகளிலும் சுற்றுச்சுவர் அமைக்கப் படாமல் திறந்த வெளியாக உள்ளது. பள்ளியை சுற்றிலும் ஏராளமான விவசாய நிலங்கள், ஓடை இருப்பதால் விஷப்பூச்சிகள் தடையின்றி எளிதாக வந்து செல்லும் நிலை உள்ளது. பள்ளி வளாகத்திற்குள் அனுமதியின்றி பலரும் புகுந்து விடுகின்றனர். இந்த செயலை கண்டித்தால் பள்ளி நிர்வாகத் தினரை மிரட்டு கின்றனர். பள்ளியில் பாதுகாப்பு கருதி சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை