கொடையில் பிரமோற்ஸவ விழா
கொடைக்கானல்: - கொடைக்கானல் வரதராஜபெருமாள் கோயிலில் புரட்டாசி சனிவாரத்தை முன்னிட்டு பிரமோற்ஸவ விழா அக். 10 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மூன்று நாள் விழாவில் பரமபதநாதன்,யோக நரசிம்மர்,மூன்றாம் நாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதனத்துடன் வரதராஜ பெருமாள் நகர்வலம் வருதல் நடந்தன.பிரமோற்ஸவ விழாவை முன்னிட்டு சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை அலங்காரம் செய்ய தங்க கவச அலங்காரத்தில் பெருமாள் காட்சியளித்தார்.