சர்ச் புனரமைப்புக்கு மானியம்
திண்டுக்கல்: மாவட்ட நிர்வாகத்தின் செய்திக்குறிப்பு: கிறிஸ்தவ சர்ச் புனரமைத்தல் பணி மானிய தொகை திட்டத்தில் மானிய தொகை பெற சர்ச்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இருக்க வேண்டும். வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் வாங்க கூடாது. 10 முதல் 15 ஆண்டு வரை உள்ள கட்டடத்திற்கு ரூ.10 லட்சம், 15 முதல் 20 ஆண்டு வரை உள்ள கட்டடங்களுக்கு ரூ.15 லட்சம், 20 ஆண்டுக்கு மேல் ரூ.20 லட்சம் என மானியத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.