உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குரூப் 1 தேர்வு1612 பேர் ஆப்சென்ட்

குரூப் 1 தேர்வு1612 பேர் ஆப்சென்ட்

திண்டுக்கல்: டி.என்.பி.எஸ்.சி., குருப் 1 தேர்வை 4 ஆயிரத்து 836 பேர் எழுதிய நிலையில், 1,612 பேர் எழுதவில்லை.தமிழ்நாடு அரசுப்பணியாளர் ஒருங்கிணைந்த குடிமைப்பணி (குரூப்1, 1ஏ பணிகளுக்கான) முதல்நிலை போட்டித்தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் 6 ஆயித்து 448 பேர் தேர்வு எழுதுவதற்காக 15 இடங்களில் 25 அறைகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. மொத்தம் 4 ஆயிரத்து 836 பேர் தேர்வு எழுதினர். 1,612 பேர் ஆப்சென்ட் ஆகினர். திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் கலெக்டர் சரவணன் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ