உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஜி.டி.என். கலை கல்லுாரி ஆண்டு விழா

ஜி.டி.என். கலை கல்லுாரி ஆண்டு விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லுாரியில் 61 வது ஆண்டு விழா நடந்தது.கல்லுாரி துணை முதல்வர் பொன்னையா வரவேற்றார். முதல்வர் சரவணன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். தாளாளர் ரெத்தினம் தலைமை வகித்தார். சினிமா இயக்குனர் சேரன் ,கல்வி இயக்குநர் மார்க்கண்டேயன் பேசினார். இயக்குநர் துரை, சட்டக்கல்லுாரி செயலர் வெங்கடேஷ், பதிவாளர் சின்னக்காளை, ஆலோசகர் ராமசாமி, பாராமெடிக்கல் கல்லுாரி முதல்வர் மனோகரன், இயற்கை மருத்துவ கல்லுாரி முதல்வர் தீபா, செவிலியர் கல்லுாரி முதல்வர் வசந்தாமணி, சட்டக்கல்லுாரி முதல்வர் ஸ்ரீனிவாசன், நிதி ஆலோசகர் சிவராஜன், பார்மஸி கல்லுாரி முதல்வர் தீன்குமார், ஜி.டி.என்., கல்விக் குழும பொறியியல் கல்லுாரி முதல்வர் ரவிச்சந்திரன், ஆட்சிக்குழு உறுப்பினர் மதிவாணன் பங்கேற்றனர். மதிப்பெண்களில் முதலிடம் பிடித்த 100 சத வீதம் வருகைப் பதிவுள்ள ,பல்வேறு நிலைகளில் சாதனை புரிந்த மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. சுய உதவிப் பிரிவின் துணை முதல்வர் நடராஜன் நன்றி கூறினார். கல்லுாரி கலாச்சார நாள் விழா நடந்தது. இதில் நடிகர் பரத் பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ