உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒரேநாளில் 4 பேருக்கு குண்டாஸ்

ஒரேநாளில் 4 பேருக்கு குண்டாஸ்

திண்டுக்கல்: பழநி தாலுகா ஆண்டிநாயக்கன் வலசு அருகே தனியார் தோட்டத்தில் கள்ள சாராயம் காய்ச்சியதாக கீரனுார் பெரிச்சிபாளையத்தை சேர்ந்த ரவி 49, அவரின் மனைவி புஷ்பா 42, ஆண்டிநாயக்கன் வலசுவை சேர்ந்த வேலுச்சாமி 62, உள்ளிட்ட 3 பேரையும் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்த அன்பழகன் 23, கத்தியைக்காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் தாலுகா போலீசாரால் கைது செய்யப் பட்டார். இவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு எஸ்.பி., பிரதீப் பரிந்துரை செய்தார். கலெக்டர் சரவணன் ஒப்புதல் படி 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை