உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மைசூரு ரயிலில் குட்கா மதுபாட்டில் பறிமுதல்

மைசூரு ரயிலில் குட்கா மதுபாட்டில் பறிமுதல்

திண்டுக்கல்:மைசூரு - துாத்துக்குடி இடையே இயங்கும் எக்ஸ்பிரஸ் ரயிலில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை, மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக திண்டுக்கல் ரயில்வே போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி திண்டுக்கல் வந்த அந்த ரயிலில் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். முன்பதிவில்லா பெட்டி ஒன்றில் கிடந்த பேக்கை போலீசார் சோதனையிட்டதில் 2 கிலோ குட்கா, புகையிலைப்பொருட்கள், மற்றொரு பையிலிருந்த 11 மதுபாட்டில்களை கைப்பற்றினர். பின் அவற்றை திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதை கடத்தியவர்கள் யார் என உணவு பாதுகாப்புத்துறையினர் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி