மேலும் செய்திகள்
சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு சிறை
21-Mar-2025
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியில் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கோபால்பட்டியைச் சேர்ந்தவர் அஜய் குமார் 26. 2021ல் அப்பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஆந்திராவிற்கு கடத்திச் சென்றார். இருவரும் திருமணம் செய்தனர். சிறுமியின் பெற்றோர் சாணார்பட்டி போலீசில் புகார் அளித்தனர். ஆந்திராவில் இருந்த அஜய்குமாரை போலீசார் கைது செய்து சிறுமியை மீட்டனர். இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அஜய்குமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ. 1.55 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார்.
21-Mar-2025