மேலும் செய்திகள்
சிறுமிக்கு தொல்லை; வாலிபருக்கு ஆயுள்
29-Oct-2024
திண்டுக்கல்:நத்தத்தில் பள்ளி சிறுமி, வத்தலக்குண்டில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவருக்கு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.தென்காசி மேக்கரையை சேர்ந்த கூலித்தொழிலாளி ஜாகிர்உசேன் 23. இவர் 2023ல் திருப்பூரில் வேலை செய்தார். அப்போது நத்தத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் குடும்பத்துடன் திருப்பூரில் இருந்தார். இருவரும் பழகினர். இந்நிலையில் அச்சிறுமி குடும்பத்துடன் நத்தத்திற்கு வந்த நிலையில் இங்கு வந்தஜாகிர் உசேன் காதலிப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இந்தவழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் ஜாகிர் உசேனுக்கு 30 ஆண்டு சிறை ,ரூ.1.10 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார். மற்றொரு வழக்கு
வத்தலக்குண்டு கூலித்தொழிலாளி சக்திவேல்37. இவர் 2020ல் இப்பேரூராட்சியில் துாய்மைப் பணியாளராக இருந்தபோது அதே பகுதியை சேர்ந்த 16 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் சக்திவேலுக்கு 9 ஆண்டு சிறை , ரூ.80 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார்.
29-Oct-2024