உள்ளூர் செய்திகள்

கொடையில் சாரல் மழை

கொடைக்கானல்: கொடைக்கானலில் நேற்று சாரல் மழையுடன் பனிமூட்டம் நிலவியதால் இயல்பு வாழ்க்கை பாதித்தது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் முதல் சாரல்,மிதமான மழை பெய்கிறது. கொடைக்கானல்,தாண்டிக்குடியில் நேற்று காலை முதலே விட்டு விட்டு சாரலுடன் மிதமான மழை பெய்கிறது. நகரை பனிமூட்டம் சூழ்ந்து எதிரே வரும் வாகனம் தெரியாத நிலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் வருகை மட்டுமே இருந்தது. இடைவிடாது பெய்தால் மழையால் இயல்பு வாழ்க்கை பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை