உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

பழநியில் ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

பழநி, : பழநி கோயிலில் சில நாட்களுக்கு முன் எடப்பாடி சேர்ந்த பக்தர் ஒருவர் கோயில் ஊழியர்களால் தாக்கப்பட்டார். இதை கண்டித்து ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நேற்று மாலை பழநி பஸ்ஸ்டாண்ட் மயில் ரவுண்டான அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஹிந்து முன்னணி மாநில செயலாளர்கள் செந்தில், முத்துக்குமார், மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார், ஹிந்து முன்னணி மதுரை கோட்ட செயலாளர் பாலன், மாவட்ட துணைத் தலைவர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இளம்பரிதி, அஜித் குமார், ஹிந்து வியாபாரிகள் நலச்சங்க மாநில செயலாளர் ஜெகன் பங்கேற்றனர்.காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசியதாவது,கடவுள் நம்பிக்கை இல்லாத அதிகாரிகள் ஹிந்து அறநிலையத்துறை கோயில்களில் செயல்படுகின்றனர். உடலை வருத்தி பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் தாக்கப்படுகின்றனர். வருவாய் அதிகம் உள்ள கோயில்களில் ஊழல் நடக்கிறது. ஹிந்து பக்தர்கள் கோயில்களின் தாக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. பக்தர்கள் தாக்க உடந்தையாக இருந்த அதிகாரிகள் ,ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி