உள்ளூர் செய்திகள்

ஹாக்கி போட்டி

திண்டுக்கல்: இந்திய ஹாக்கி சங்கத்தின் நுாற்றாண்டு விழா , ஜூனியர் உலக்கோப்பை ஹாக்கி போட்டி குறித்து விழிப்புணர்வு சாதனை நிகழ்ச்சியாக இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் ஆயிரம் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்ட சங்கம் சார்பில் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஹாக்கி போட்டிகள் நடந்தது. கவுரவ தலைவர் காஜாமைதீன், கால்பந்து செயலாளர் சண்முகம் தொடங்கி வைத்தனர். பள்ளி, கல்லுாரி, கிளப் அணிகள் என 10 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணிகளும் தலா 10 நிமிடங்கள் விளையாடின. வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !