மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
16-Oct-2025
திண்டுக்கல்: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்,பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் உலக உயர வளர்ச்சித் தடைப்பட்டோர் தினம் கடைபிடிக்கப்பட்டது. இைதயொட்டி உயர வளர்ச்சி தடைபட்டோரை கடும் ஊனமுற்றோராக அறிவித்து அரசின் அனைத்து திட்டங்களிலும் முன்னுரிமை வழங்க வேண்டும். கல்வி, வேலை வாய்ப்புகளில் சிறப்பு திட்டங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, உயர வளர்ச்சி தடைப்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஒன்றிணைந்து மனித சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இதற்கு மாவட்டச் செயலாளர் பகத்சிங் தலைமை வகித்தார். தலைவர் ஜெயந்தி, ஒன்றிய செயலர் ஸ்டாலின் முன்னிலை வகித்தனர்.
16-Oct-2025