உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கணவன், மனைவி விபத்தில் பலி

கணவன், மனைவி விபத்தில் பலி

நத்தம்; திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கார் மோதி டூவீலரில் சென்ற கணவன், மனைவி பலியாகினர்.நத்தம் பாலப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் 55. மனைவி சுமதி 48. இவர்கள் நேற்று மதியம் டூவீலரில் விளாம்பட்டிக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினர். மதுரை ரோட்டில் உள்ள கோமனாம்பட்டி பிரிவு பகுதியில் வந்த போது எதிரே அதிவேகமாக பெங்களூரு ரஞ்சித் 36, ஓட்டி வந்த கார், இவர்கள் மீது மோதியது. இதில் கணவன்,மனைவி சம்பவ இடத்திலேயே பலியாகினர். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ