உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாவட்டம் முழுவதும் சட்டவிரோத சூதாட்ட கிளப்கள் அதிகரிப்பு: கட்டுப்படுத்துதல், கைது நடவடிக்கைகளில் மெத்தனம்

மாவட்டம் முழுவதும் சட்டவிரோத சூதாட்ட கிளப்கள் அதிகரிப்பு: கட்டுப்படுத்துதல், கைது நடவடிக்கைகளில் மெத்தனம்

மாவட்டத்தைப் பொறுத்த வரையில் சட்ட விரோத மது விற்பனை, லாட்டரி விற்பனை அதிகரித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து சூதாட்ட கிளப்கள் அதிக அளவு பெருகி பலரும் அடிமையாகி பணத்தை இழந்து வருகின்றனர். பலர் பொருளையும், பணத்தையும் இழந்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். குறிப்பாக, புறநகர் மற்றும் எல்லைப்பகுதிகளில் உள்ள மண்டபங்களில் பெரிய அளவில் இவை நடத்தப்படுகின்றன. இந்த வகை கிளப்களில் ரம்மி, வெட்டுச்சிட்டு, டோக்கன் ஆட்டம் என பலவகை விளையாட்டுகளால் சூதாட்டத்திற்கு அடிமையாகி வரும் பலர் பல லட்சங்களை இழந்துவருகின்றனர். இதில் பணத்தை இழந்தவர்கள் விரக்தியில் கால்நடைகளை திருடுவது, வீட்டில் உள்ள பொருட்கள், வாகனங்களை திருடுவது என குற்ற சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர். தினமும் லட்சக் கணக்கான ரூபாய் புழங்கி வரும் நிலையில் விடுமுறை நாட்களில் இத்தொகை பல லட்சங்களுக்கு மேல் சென்று விடுகிறது. சுதந்திரமாக நடக்கும் இந்த சூதாட்டக் கிளப்புகளில் கலந்து கொள்ள வெளி மாவட்டங்களிலிருந்தும் பலர் தினமும் வந்து செல்கின்றனர். இன்னொருவகை சூதாட்ட 'கிளப்'கள் நகரங்களுக்கு அருகே உள்ள கிராமங்களை தேர்வு செய்து தோட்டங்கள், காடுகளில் சத்தம் இல்லாமல் இரவு, பகலாக இயங்கி வருகின்றன. ஒவ்வொரு 'கிளப்களின் பின்னணியில் அரசியல்கட்சியை சேர்ந்தவர்கள், குற்றப் பின்னணி கொண்டவர்கள் பக்க பலமாக உள்ளனர். இவற்றின் மீதான போலீசாரின் நடவடிக்கையோ மேம்போக்காக இருக்கிறது. கட்டுப்படுத்துவதில் சுணக்கம் காட்டுகின்றனர். பெயருக்கென கைது நடவடிக்கைகள் மேற்கொள்வதால் இதுபோன்ற சூதாட்ட கிளப்கள் அதிகளவில் வளர்ந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை