உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தொடர் மழையால் பசுந்தீவனம் வரத்து: நிம்மதியில் கால்நடைகள் வளர்ப்போர்

தொடர் மழையால் பசுந்தீவனம் வரத்து: நிம்மதியில் கால்நடைகள் வளர்ப்போர்

மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் தென்னை, மா, நெல்லி உள்ளிட்ட மாற்று விவசாயத்திற்கு மாறியுள்ளனர். அதே நேரத்தில் கால்நடை வளர்ப்பிலும் ஆர்வம் காட்டுகின்றனர். மழை வருவதற்கு முன் ஏற்பட்ட வறட்சியால் விவசாயிகள் கால்நடைகளை வளர்க்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர். ஒரு கட்டு வைக்கோல் ரூ.250க்கு திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வாங்கி வந்தனர். மாவட்டம் முழுவதும் தொடர் மழை பெய்ய ஆரம்பித்தது. தோட்டங்கள் மட்டுமின்றி ரோட்டோரங்கள் கூட பசுமை நிறைந்த பூமியாக மாறி உள்ளது. மாடுகள், ஆடுகளை வளர்ப்போர் பெருமூச்சு விட்டுள்ளனர். தற்போதுள்ள பசுமை இன்னும் ஒரு சில மாதங்கள் நீடிக்கும் என்ற நிலையில் அதற்குள் மீண்டும் இயற்கை வரம் கொடுக்காதா என நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை