உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நகைகடை அதிபர் வீடு, கடை உட்பட 5 இடங்களில் வருமான வரி ரெய்டு

நகைகடை அதிபர் வீடு, கடை உட்பட 5 இடங்களில் வருமான வரி ரெய்டு

திண்டுக்கல்:வரி ஏய்ப்பு செய்ததாக திண்டுக்கல் மாவட்டத்தில் நகைக்கடை அதிபர் வீடு, கடை உள்ளிட்ட 5 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ், அவரது தம்பி திரேஜ். இவர்களுக்கு சொந்தமாக ஆர்.எஸ்.நகர், மேற்கு ரத வீதி, ஒட்டன்சத்திரத்தில் 70 ஆண்டுகளுக்கு மேலாக நகை கடைகள் செயல்படுகின்றன. நேற்று தினேஷ், திரேஜூக்கு சொந்தமான நகைக் கடைகள், தாடிக்கொம்பு ரோடு பகுதியில் உள்ள 2 வீடுகள் உள்ளிட்ட 5 இடங்களில் நேற்று மதியம் 1:00 மணியிலிருந்து 6 கார்களில் வந்த 20க்கு மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை முறையாக செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடப்பதாக தகவல் வெளியானது. வீட்டின் வெளிப்பகுதியில் இருந்து யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. நகை கடைகளில் நகைகள் வாங்கிய விவரம், முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இரவு 8:00 மணிக்கு பிறகும் 7 மணி நேரத்திற்கும் மேல் சோதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !