உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அதிகரிப்பு ... சரக்கு வாகனங்களில் பயணிக்கும் அவலம்: போலீஸ் நடவடிக்கை இல்லாததால் ஜோர்

அதிகரிப்பு ... சரக்கு வாகனங்களில் பயணிக்கும் அவலம்: போலீஸ் நடவடிக்கை இல்லாததால் ஜோர்

மாவட்டத்தில் மனிதர்கள் பயணிக்க டூவீலர்கள், ஆட்டோக்கள், கார்கள், பஸ்கள், ரயில்கள் என பல வகையான போக்குவரத்து வாகனங்கள் இருந்தபோதிலும் சரக்கு வாகனங்களில் பயணிப்பது தொடர்கிறது. பொதுமக்களும் பஸ் இல்லாத நேரங்கள்,பஸ் போக்குவரத்து இல்லாத இடங்களுக்கு சரக்கு வாகனங்களில் பயணிக்கின்றனர். மேலும் திருமணம், காதணி விழா உள்ளிட்ட விழா, அரசியல் கட்சிகளின் மாநாட்டில் பங்கேற்க, அரசியல் கட்சித் தலைவர்களை வரவேற்பதற்கும், துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும் அதிக அளவில் சரக்கு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆபத்து நிறைந்த பயணம் என்பதை அறிந்தும் பலர் சரக்கு வாகனத்தில் அச்சமின்றி பயணிக்கின்றனர். சரக்கு வாகனங்கள் விபத்தில் சிக்கும் போது இவர்களில் பலர் உயிரை இழப்பதும் காயம் அடைவதும் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார் இத்தகைய வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதுடன் நின்று விடாமல் அடுத்தடுத்து இதுபோல் நடந்தால் பறிமுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களிடமும் சரக்கு வாகனங்களில் செல்வதால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி