உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பு! அறவே இல்லை மக்கள் ஒத்துழைப்பு

பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பு! அறவே இல்லை மக்கள் ஒத்துழைப்பு

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இவற்றை பறிமுதல் செய்வதில் அதிகாரிகளின் தொடர் நடவடிக்கை அவசியமாகிறது. அதே நேரத்தில் பொதுமக்களும் ஒத்துழைத்தால்தான் பிளாஸ்டிக்கை அறவே ஒழிக்க முடியும். ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்து அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.நாடு முழுவதும் ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக்கிற்கு அரசு தடை விதித்துள்ள போதிலும் இதன் பயன்பாடு குறைந்த பாடு இல்லை. 75 மைக்ரான்களுக்கு குறைவான பிளாஸ்டிக் கேரி பேக் உற்பத்தி செய்யவும், இறக்குமதி செய்யவும், இருப்பு வைக்கவும், விற்கவும், பயன்படுத்தவும் தடை உள்ளது.ஆனால் இத்தகைய பொருட்களின் பயன்பாடு ஓட்டல்கள், மளிகை கடைகள், பேக்கரிகளில் அதிகம் உள்ளது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள் திருவிழாக்கள், கட்சி கூட்டங்களில், அன்னதானம் நடைபெறும் இடங்கள், மதுபான கடைகளில் அதிகமாக புழக்கத்தில் உள்ளன. அதிகாரிகள் நகர் , கிராமப்புற பகுதிகளில் அடிக்கடி சோதனையிட்டு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வோர் மீது அபராதம் விதித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொதுமக்களும் ஓட்டல்கள் ,மளிகை கடைகளுக்கு செல்லும் போது தவறாமல் ஒரு துணிப்பை எடுத்துச் செல்வதை மனதில் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மீண்டும் மஞ்சள் பை இயக்கத்தின் மூலம் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்யாமல் விடுவதால் இவற்றின் பயன்பாடு கணிசமாக அதிகரித்து வருகிறது. அதிகாரிகள் தொடர் நடவடிக்கை எடுத்தால் தான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Nagamani Nagarajan
ஆக 26, 2024 20:55

உற்பத்தியை நிறுத்தினால் அதுவே சரியாகிவிடும் மக்களை குறை கூறுவது மிகப்பெரும் தவறு இதற்கு காரணம் அரசு மட்டுமே


m.n.balasubramani
ஆக 26, 2024 16:02

ஓரளவு நீலகிரி மாவட்டம் சுத்தமாக உள்ளது. அங்கு பயன்பாடு பக்கெஜிங் இல் மட்டும் உள்ளது . மக்கள் திருந்த வேண்டும் வாய்ப்பு இல்லை


TSRSethu
ஆக 26, 2024 12:05

நீங்கள் கூறுவது நூறு சதம் உண்மை. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தாராளமாக உபயோகப்படுத்தப்படுகிறது. தெர்மோ ஃபார்மிங் பொருட்கள் தெர்மோ ஃபார்மிங் போன்றே குறைந்த தடிமன் கொண்ட தின் வால் பொருட்கள் கேரி பேக்குகள் எளிதில் மட்கும் என்ற பெயரில் பல கேரி பேக்குகள் பிளிஸ்டர் பேக்குகள் ஸ்ட்ராக்கள் குளிர்பானங்களுடன் ஒட்டி அனுப்பப்படும் ஸ்ட்ராக்கள் முதலியன உடனே தடை செய்யப்பட வேண்டும் எந்த சட்டம் கொண்டு வந்தாலும் அதனை ஏமாற்றும் வேலை நடக்கிறது. அதிகாரிகளும் ஓரளவுக்கு மேல் அதனை புரிந்து அதனை செயல்படுத்த முடிவதில்லை. அரசாங்கம் நல்ல பிளாஸ்டிக் பற்றிய வல்லுநர்களை வரவழைத்து ஆலோசனை நடத்தலாம். அல்லது செய்தி தாள்களில் விளம்பரம் செய்து ஆலோசனைகளை பெற்று தடை செய்யலாம். மக்களும் கொஞ்சம் திருந்த வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை