உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குடிநீருடன் கலக்கும் கழிவுநீரால் தொற்று...

குடிநீருடன் கலக்கும் கழிவுநீரால் தொற்று...

பெயர் பலகையால் தடுமாற்றம் : திண்டுக்கல் ஒடுக்கம் ரோடு அருகே பெயர் பலகை அழிந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். அழிந்துள்ள பலகையால் தெரு பெயர் தெரியாமல் சுற்றி செல்கின்றனர். பெயர் பலகையை புதுபிக்க வேண்டும்.--ஜெகதீஷ், திண்டுக்கல்.-----குடிநீருடன் கலக்கும் கழிவுநீர் : திண்டுக்கல் நத்தம் ரோடு நொச்சிஓடைப்பட்டி கிரீன் சிட்டி செல்லும் குடிநீர் குழாயும் சாக்கடை கழிவு நீரும் ஒன்றாக கலக்கிறது. இதை யாரும் கண்டுகொள்ளவில்லை. நோய் பரவும் அபாயம் உள்ளது.-சிவக்குமார், நொச்சிஓடைப்பட்டி.-------ரோடு பள்ளத்தால் விபத்து : வடமதுரை எரியோடு ரோட்டில் வெள்ளமடை பகுதியில் ரோட்டின் நடுவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் டூவீலர்கள் சிக்கி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இப்பகுதியை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை வேண்டும்.---கணேசன், வடமதுரை.--------பயன்பாடில்லாத தண்ணீர் தொட்டி : திண்டுக்கல் நல்லாம்பட்டியில் தண்ணீர் தொட்டி சேதம் அடைந்துள்ளது. பயன்பாடு இன்றி உள்ளதால் மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். சரி செய்து தண்ணீர் தொட்டியை புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பிச்சைமுத்து, நல்லாம்பட்டி.--------தொற்று பரப்பும் கழிவுநீர் : ரெட்டியார்சத்திரம் முத்தலாம்பட்டி புதுார் ஆரம்ப பள்ளி அருகே கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் தேங்குகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் பாதிக்கின்றனர். தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீர் கடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-முத்துப்பாண்டி, திண்டுக்கல்.--------குப்பையால் உருவாகும் சீர்கேடு : திண்டுக்கல் மோர்பட்டி ஊராட்சி கொல்லப்பட்டியில் அரசு பள்ளி அருகில் துாய்மை பணியாளர்கள் குப்பையை அள்ளாமல் உள்ளனர். தொடர்ந்து பள்ளி அருகே தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் மாணவர்கள் பாதிக்கின்றனர்.-விஜயா, கொல்லப்பட்டி.---------எரியாத உயர் கோபுர விளக்கு : பழநி - திண்டுக்கல் ரோட்டில் உள்ள உயர் கோபுர விளக்கு மூன்று மாதங்களாக எரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பாதிக்கின்றனர். இரவு நேரங்களில் விபத்துக்கள் நடக்கிறது. உயர் கோபுர விளக்கு சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-செந்தில்குமார், பழநி.---------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை