மணல் ஆலையில் ஆய்வு ; சீல்..
வடமதுரை:வேடசந்துார், குஜிலியம்பாறை தாலுகாகளில் 20க்கு மேற்பட்ட இடங்களில் சட்டவிரோதமாக கிராவல் மண்ணை நீரால் கழுவி மணல் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இது குறித்து உயர்நீதி மன்றத்தின் தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் இத்தகைய இடங்களில் ஆய்வு நடத்த கனிமவளத்துறைக்கு அறிவுறுத்தியது. 'இதையடுத்து நேற்று கனிமவளத்துறை அலுவலர் செல்வசேகரன், தாசில்தார் சுல்தான்சிக்கந்தர் தலைமையில் அதிகாரிகள் கொல்லப்பட்டி கோப்பம்பட்டி பகுதியில் இயங்கிய மணல் தயாரிப்பு ஆலையில் ஆய்வு செய்து சீல் வைத்தனர். இது போல் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.