உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒருங்கிணைந்த தொழிற்நுட்ப பணி தேர்வு

ஒருங்கிணைந்த தொழிற்நுட்ப பணி தேர்வு

திண்டுக்கல், : தமிழக அரசின் பொது பணித்துறையில் பொறியியல் பிரிவு பணிகளுக்கு ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக டி.என்.பி.எஸ்.சி., மூலம் ஒருங்கிணைந்த தொழிற்நுட்ப பணி தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது.திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தேர்வர்களுக்கு ஜி.டி.என். கலைக்கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. தேர்வர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். ஸ்மார்ட் கடிகாரம், கால்குலேட்டர்கள், அலைபேசி உள்ளிட்ட பொருட்கள் அனுமதிக்கப்படவில்லை. 900 பேர் தேர்வு எழுதினர்.ஐ.டி.ஐ., படித்தவர்கள் காலையில் நடந்த தேர்வையும், டிப்ளமோ படித்தவர்கள் காலை, மதியத்தில் நடந்த இரு தேர்வையும் எழுதினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை