உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இடைப்பாடி பக்தர்கள் பழநியில் தங்கி தரிசனம்

இடைப்பாடி பக்தர்கள் பழநியில் தங்கி தரிசனம்

பழநி:பழநி முருகன் கோயிலில் தைப்பூச விழாவை தொடர்ந்து காவடிகளுடன் வந்த இடைப்பாடி பக்தர்கள் நேற்றிரவு கோயிலில் தங்கி தரிசனம் செய்தனர்தைப்பூச திருவிழாவையொட்டி சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்த பருவதராஜகுல மகாஜன சமுதாய பக்தர்கள் 300 ஆண்டுகளுக்கு மேலாக பழநி கோயிலுக்கு காவடி எடுத்து வருகின்றனர். அதன்படி பால், புஷ்பம், சர்க்கரை, இளநீர் காவடிகள் எடுத்து ஆட்டம் பாட்டத்துடன் சேலம்,சென்னிமலை, காங்கேயம், தாராபுரம் வழியாக நேற்று (பிப்.1) பழநி வந்தனர்.பெரியநாயகி அம்மன் கோயில் வந்து அங்கிருந்து முருகன் கோயில் சென்றனர். முருகன் கோயிலில் சாயரட்சை பூஜையில் தரிசனம் செய்த அவர்களுக்காக 20 டன்னுக்கும் மேல் பஞ்சாமிர்தம் தயார் செய்யப்பட்டது. நேற்றிரவு அங்கு தங்கி வழிபாட்டனர். இக்கோயிலில் இரவில் தங்கி தரிசனம் செய்ய இச்சமுதாய மக்கள் மட்டும் அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை