உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சர்வதேச புத்தக வெளியீட்டு விழா

சர்வதேச புத்தக வெளியீட்டு விழா

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச புத்தக வெளியீட்டு விழா 2 நாட்கள் நடந்தது. கல்லூரி தாளாளர் வேம்பணன் தலைமை வகித்தார். இயக்குனர் கவின்குமார், நிர்வாக இயக்குனர்கள் குப்புசாமி, டாக்டர் பிரேம்குமார் முன்னிலை வகித்தனர். முதல்வர் தேன்மொழி, ஆய்வு திட்ட முதல்வர் டீன் மேரி ஜோஸ்பின் இசபெல்லா விழாவை துவக்கி வைத்தனர். எக்ஸிகியூட் ஸ்மார்ட் மென்பொருள் நிறுவன உரிமையாளர் சுதாகரன் சுருளிராஜன், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி முனைவர் வாசுகி, ஆத்தூர் கூட்டுறவு கலைக்கல்லூரி முனைவர் தீபமலர், மதுரை காமராஜர் பல்கலை கல்லூரி கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர் வடிவேல் முருகன், காந்திகிராம பல்கலை கணினி அறிவியல் துறை பேராசிரியர் எழிலரசன் பேசினர். பழநி ஆண்டவர் கலை கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் மென்பொருள் சார்ந்த கட்டுரைகளை விளக்கப்பட காட்சி மூலம் எடுத்துரைத்தனர். தொடர்ந்து சக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணினி அறிவியல் துறை மாணவிகள் விளக்கப்பட காட்சிகளை எடுத்துரைத்தனர். பல கட்டுரைகள் அடங்கிய சர்வதேச புத்தக வெளியீடு நடந்தது. துணைத் தலைவர் கவிதா மற்றும் துறை பேராசிரியர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை