மேலும் செய்திகள்
அறிவியல் தினம்
26-Feb-2025
சின்னாளபட்டி : காந்திகிராம பல்கலையில் இந்தியாவில் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான சாதனைகள், எதிர்கால சவால்கள் குறித்த சர்வதேச மாநாடு நடந்தது. துணைவேந்தர் பஞ்சநாதம் தலைமை வகித்தார்.அப்போது அவர் பேசுகையில், ''உலகளாவிய பிரச்னைகளுக்கு, நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில் ஒவ்வொரு நாடும் மகத்தான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. கல்விச் செயல்பாடுகள் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதை நோக்கி இருக்க வேண்டும்,'' என்றார்.திருச்சி பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர் செல்வம் துவக்கி வைத்தார். இலங்கை யாழ்ப்பாண பல்கலை பொருளாதார பேராசிரியர் விஜயகுமார் பேசினார்.பொருளாதாரத்துறை இணை பேராசிரியர் மணிகண்டன் நன்றி கூறினார்.
26-Feb-2025