பழநி கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
பழநி: பழநி சின்னகலையம் புத்தூரில் செயல்பட்டு வரும் பழநியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. பழநி, சின்னகலையம்புத்தூரில் செயல்பட்டு வரும் பழநியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில் தமிழ் முதுகலை உயராய்வு மையம், மதுரை காமராஜ் பல்கலை தமிழியல் துறை, திருக்குறள் இருக்கை ஒருங்கிணைந்து மலேசியா இட்ரிஸ் கல்வியல் பல்கலை.,யுடன் இணைந்து அற இலக்கியங்களில் பல்துறை சிந்தனைகள் எனும் தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி வரவேற்றார். மதுரை காமராஜ் பல்கலை தமிழியல் துறை தலைவர் சத்தியமூர்த்தி, பன்னாட்டு சிந்தனைகள் குறித்து ஆய்வு நூலை வெளியிட்டார். கல்லூரி உயராய்வு மைய துறை தலைவர் வாசுகி, குச்சனூர் சனீஸ்வர அறக்கட்டளை மடாலய நிறுவனர் ராஜேந்திரன்,மலேசியா இட்ரிஸ் கல்வியியல் பல்கலை., பேராசிரியர்கள் பொன்னையா, இளங்குமரன், சிவநாதன் பிராங்க்ரின் ஜோஸ் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.