புதிய ரேஷன் கார்டு வழங்கல்
பழநி : பழநியில் ரேஷன் கார்டிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு எம்.எல்.ஏ., செந்தில்குமார் புதிய ரேஷன் கார்டுகளை வழங்கினார்.பழநியையடுத்த நெய்க்காரப்பட்டி,ஆயக்குடி, பாலசமுத்திரம்,பாப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 600க்கும் மேற்பட்டோர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் முதல் கட்டமாக 199 பேருக்கு ரேஷன் கார்டு வழங்கும் விழா எம்.எல்.ஏ., செந்தில்குமார் தலைமையில் நேற்று நடந்தது. அவர் பேசுகையில், 'தற்போது வந்துள்ள ரேஷன் கார்டுகளை இந்த விழா மூலம் உடனடியாக வழங்கப்படுகிறது. இன்னும் 4 நாட்களில் மேலும் 200 நபர்களுக்கும், அடுத்த சில நாட்களில் மீதமுள்ள அனைவருக்கும் ரேஷன் கார்டு வழங்கப்படும். ஒரு நபர் ரேஷன் கார்டுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். தாசில்தார்கள் பிரசன்னா, லட்சுமி, பி.டி.ஓ., வேதா, நளினா, நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி கலந்து கொண்டனர்