இலை மீது தாமரை மலர்வது இயல்பு * சொல்கிறார் தினகரன்
திண்டுக்கல்:''இலை மீது தாமரை மலர்வது இயல்பு,'' என திண்டுக்கல்லில் அ.ம.மு.க., பொது செயலர் தினகரன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது : தி.மு.க., ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தமிழக மக்களின் துணையுடன் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அ.ம.மு.க., உள்ளது. அ.தி.மு.க.,வில் அ.ம.மு.க., இணைவது போன்ற யூகங்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது. தமிழக அரசியல் மட்டுமின்றி இந்திய அரசியலிலும் எதிர் எதிராக இருந்து தேர்தல் நேரத்தில் ஒரு பொது நோக்கத்துக்காக பல கட்சிகள் ஓரணியில் இணைவது கடந்த கால வரலாறுகளில் உள்ளது. அப்படி தான் ஆட்சியை கலைத்த காங்.,வுடன் தி.மு.க., கூட்டணி அமைத்தது.தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க., நிறைவேற்றவில்லை என்பதால் தான் மாற்றுத்திறனாளிகள் வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறினார். ஆனால் கையெழுத்தே மறந்து விட்டதால் முதல்வர் ஸ்டாலின் கையொப்பமிடவில்லை. இதற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர்.துணைவேந்தர் மாநாடு தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தமிழக கவர்னரை கட்டுப்படுத்த முடியுமா என்பது தெரியவில்லை. இலை மீது தாமரை மலர்வது இயல்பு. அதே நேரத்தில் தாமரை இலையை அழுத்துவதில்லை. இதுகுறித்து பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதிலும் தவறில்லை. கூட்டணி அமைந்ததை உவமையாக கூறி உள்ளார். அனைத்து தொழில்களும் தி.மு.க., ஆட்சியில் நலிவடைந்து விட்டன என்றார்.