மல்லிகை கிலோ ரூ.1400
நிலக்கோட்டை:திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் நேற்று முன் தினம் கிலோ ரூ.1200க்கு விற்ற மல்லிகை பூ நேற்று ரூ.1400 ஆக உயர்ந்தது.நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் தொடர்ந்து கந்தசஷ்டி விழா, முகூர்த்த நாட்கள் வருவதையடுத்து பூக்களின் தேவை உயர்ந்து வழக்கத்தை விட அதிக விலைக்கு பூக்கள் விற்பனையாயின. நேற்று முன் தினம் கிலோ ரூ.1200 க்கு விற்ற மல்லிகை பூ நேற்று ரூ.1400 ஆக உயர்ந்தது. சம்பங்கி ரூ.50, பிச்சி ரூ. 450, முல்லை ரூ. 600, ரோஜா ரூ.100, செண்டு மல்லி ரூ.-70க்கு விற்றன. பூக்களுக்கு கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.