மேலும் செய்திகள்
எகிறியது பூக்களின் விலை மல்லிகை கிலோ ரூ.1600
31-Oct-2024
நிலக்கோட்டை : பனிப்பொழிவு காரணமாக நிலக்கோட்டையில் மல்லிகை பூக்களின் வரத்து குறைவால் கிலோ ரூ.1600 ஆக விலை உயர்ந்தது.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சுற்றுப்பகுதிகளில் மல்லிகை, முல்லை, பிச்சி, ரோஜா, சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது பனிப்பொழிவின் காரணமாக மல்லிகை செடிகளில் மகசூல் குறைய குறைந்த அளவிலான பூக்களே மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. வியாபாரிகளின் தேவைக்கேற்ப வரத்து இல்லாததால் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.அதன்படி நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் நேற்று கிலோ மல்லிகை ரூ. 1600 க்கு விற்கப்பட்டது இனிவரும் நாட்களில் கிலோ ரூ.2 ஆயிரத்தை தாண்டும் என வியாபாரிகள் தெரிவித்தனர். மல்லிகைக்கு பதிலாக முல்லை, பிச்சிப்பூக்களை வியாபாரிகள் வாங்கிச்செல்வதால் அவற்றின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
31-Oct-2024