உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஜூனியர்ஸ் கிரிக்கெட் லீக்; விக்னேஷ் அணி வெற்றி

ஜூனியர்ஸ் கிரிக்கெட் லீக்; விக்னேஷ் அணி வெற்றி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம், சின்னாளபட்டி சண்முகம் ஹாஸ்பிடல் இணைந்து நடத்தும் 16 வயதிற்குட்பட்டோருக்கான ஸ்ரீமதி கோப்பை ஜூனியர்ஸ் கிரிக்கெட் லீக் போட்டியில் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் அணி வென்றது. இதற்கான லீக் போட்டிகள் பி.எஸ்.என்.ஏ., ஆர்.வி.எஸ்., ரிச்மேன் மைதானங்களில் நடந்தன. முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கிரிக்கெட் அகாடமி 20.4 ஓவர்களில் 64 க்கு ஆல்வுட் ஆனது. மகதீர் 3 விக்கெட். சேசிங் செய்த மன்சூர் யங்ஸ்டர்ஸ் ஜூனியர்ஸ் அணி 19 ஓவர்களில் 65/9 எடுத்து வென்றது. பிரேம்குமார் 4, ஹரீஷ் 3 விக்கெட். பிரஸித்தி வித்யோதயா அணி முதலில் பேட்டிங் செய்து 25 ஓவர்களில் 192/7. ஸ்ரீஹரி 59, ரித்தீஷ் 39. சேசிங் செய்தி பாரத் சிசி அணி 11.2 ஓவர்களில் 53க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. மதுபிரசாத் 5 விக்கெட். ஒட்டன்சத்திரம் பட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 25 ஓவர்களில் 80/7. சேசிங் செய்த ஆர்ஞ்ச் அகாடமி அணி 6.4 ஓவர்களில் 81/0 எடுத்து வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பழநி யுவராஜ் கிரிக்கெட் அணி 25 ஓவர்களில் 144/4. அஸ்வின் 66, ஜெயந்த் 3 விக்கெட். சேசிங் செய்த வேடசந்துார் ஜாஹீர் கிரிக்கெட் அணி 25 ஓவர்களில் 138/7 எடுத்து தோற்றது. கோபிநாத் 47, மோகன்குமார் 40 (நாட்அவுட்). திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதலில் பேட்டிங் செய்து 25 ஓவர்களில் 236/4. ஜெய்சிவஸ்ரீ 64, சஞ்சய் பாலாஜி 59, தீபன் 50 (நாட்அவுட்), சஞ்சய்பாலாஜி 49. சேசிங் செய்தி மன்சூர் யங்ஸ்டர்ஸ் 25 ஓவர்களில் 53/7 எடுத்து தோற்றது. திண்டுக்கல் பாரத் சிசி அணி முதலில் பேட்டிங் செய்து 30 ஓவர்களில் 129/7. சந்தோஷ் 56. சேசிங் செய்த மெஜஸ்டிக் சிசி அணி 23.5 ஓவர்களில் 130 எடுத்து வென்றது. முகேஷ் 41. முதலில் பேட்டிங் செய்த பழநி யுவராஜ் கிரிக்கெட் அகாடமி அணி 14 ஓவர்களில் 43 க்கு ஆல்அவுட். ஹரிஷ்செல்வராஜ் 5, லக்சுமணன் 3 விக்கெட். சேசிங் செய்த திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கிரிக்கெட் அகாடமி அணி 10.2 ஓவர்களில் 44/3 எடுத்து வென்றது. முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் பிரஸித்தி அணி 25 ஓவர்களில் 151/8. சச்சின் 46, ஸ்ரீஹரி 43, சசிகுமார் 4 விக்கெட். சேசிங் செய்த ஆரஞ்ச் அகாடமி அணி 17.2 ஓவர்களில் 77க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !